பட்டிருப்பு கல்வி வலயத்தில் 1600 மாணவர்கள் பயன்பெறவுள்ள பரிட்சார்த்த செயற்றிட்டம்.
தற்போதைய பொருளாதர நெருக்கடியான காலத்தினை கருத்திற் கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை இலகுபடுத்தும் நோக்குடன் பட்டிருப்பு கல்வி வலயத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள “பொருளாதார நெருக்கடி கால நிகழ் நிலை On line மாற்று உபாய செயற்றிட்டத்தின்" பரீட்சார்த்த நிகழ்வு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலமையில் புதன் கிழமை (01.03.2023) வலயக்கல்வி அலுவலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இப்பரீட்சார்த்த நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் திவிதரன், ஆரம்ப கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் தயாளசீலன், தகவல் தொழிநுட்பத்திற்கு பொறுப்பான உதவிக்கல்வி பணிப்பாளர் பார்த்தீபன், ஆசிரிய ஆலோசர்கள், தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இதில்கலந்து கொண்டிருந்தனர்.
நான்கு வருடகால நடுத்தர செயற்றிட்டமாக வாரத்தில் இரண்டு நாட்களில் குறித்த செயறிட்டத்தின் பிரகாரம் நிகழ் நிலை ஊடாக வலயத்தின் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களினால் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் இத்திட்டத்தின் ஊடாக வலயத்தில் உள்ள சுமார் 1600 மாணவர்கள் பயன்பெறவுள்ளதாக வலயக்கல்வி பணிப்பாளர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment