வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வன்னி ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் நாடாளவிய ரீதியில் முன்னெடுத்துவரும் கிராமப்புற பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் வழங்கும் விசேட செயற்திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனமான நல்லையா கல்வி நிதியம் மற்றும் நற்குன முன்னேற்ற அமைப்பு ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரனையில் வன்னி ஹோப் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அனுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் மற்றும் தம்புத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட பகல தலாவ சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகள் நேற்று அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் வன்னி
ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம் , அவரது பாரியார் ரேனுகா சிவஞான
சுந்தரம், பணிப்பாளர் வைத்தியர் மாலதி வரன்
நல்லையா கல்வி நிதியத்தின் பணிப்பாளர் பாலச்சந்திரன் நல்லையா, அவரது பாரியார் சிரானி
நல்லையா , வன்னி ஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான
பணிப்பாளர் என்.முரளிதரன் மற்றும் வன்னி ஹோப் நிறுவன உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள்
மற்றும் பெற்றோர்கள என பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment