(நூருல் ஹுதா உமர்)
வடக்கு , கிழக்கு தொடர்பில் டக்ளஸ் தனது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் : ஐ.கா. கோரிக்கை.
வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைத்து இடைக்கால கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது அழுத்தத்தை ஒருமித்த குரலில் கொடுக்க வேண்டுமென ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் , கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள கோரிக்கையை அவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை(04) அவர் விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா என்பவர் நாம் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள, இனவாதம் இல்லாத தமிழ் தலைவர். அந்த வகையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து இடைக்கால நிர்வாகம் கேட்பதானது பிழையானதாகும்.
வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் தனித்தனியான இடைக்கால நிர்வாகத்தை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா முன் வைத்திருக்க வேண்டும். அதுதான் நிலையான தீர்வாகும்.
சந்திரிக்கா ஆட்சிக்காலத்திலும் இவ்வாறு வடக்கையும் கிழக்கையும் பிரித்து புலிகளிடம் இடைக்கால நிர்வாகம் கொடுக்க முயற்சி எடுத்ததும் அதனை கிழக்கு முஸ்லிம் சமூகம் கடுமையாக எதிர்த்ததையும் நாம் மறந்து விடககூடாது.
வடக்கில் புலிகள் தனக்கே சுதந்திரமாக அரசியல் செய்ய முடியாமல் இருந்த டக்கஸ் தேவாவுக்கு, இன்னமும் அவரை தமிழ் கூட்டமைப்பினர் ஒரு தலைவராக ஏற்காத நிலையில் வடக்கு கிழக்கு இணைந்த இடைக்கால நிர்வாகத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ முடியுமா என கேட்கிறோம்.
ஆகவே இது விடயத்தை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீள் பரிசீலனை செய்வதுடன் வடக்கும் கிழக்குக்கும் தனித்தனியான இடைக்கால நிர்வாக கோரிக்கையை முன் வைப்பதே சாத்தியமானதாகும் என்பதை ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) அவரிடம் கேட்டுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment