5 Sept 2022

போதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு கடமையாற்றிய ஏறாவூர் பொலிஸார் 56 பேருக்கு சன்மானம் 8 இலட்சத்துக்கு மேற்பட்ட தொகை பகிர்ந்தளிப்பு.

SHARE

போதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு கடமையாற்றிய ஏறாவூர் பொலிஸார் 56 பேருக்கு சன்மானம் 8 இலட்சத்துக்கு மேற்பட்ட தொகை பகிர்ந்தளிப்பு.

போதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு கடமையாற்றிய ஏறாவூர் பொலிஸார் 56 பேருக்கு ரூபாய் 8 இலட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாய் சன்மானத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இலங்கைப் பொலிஸ் சேவையின் 156வது வருட நிகழ்வு வாரத்தையொட்டிய வைபவம் ஏறாவூர் பொலிஸ் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை 03.09.2022 இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தே போதைப் பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயற்பட்டு போதைப் பொருள் விடயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தமைக்காக 56 பொலிஸாருக்கு சன்மான ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டது.

அதிகூடிய சன்மானத் தொகையான 228750 ரூபாவை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சியாம்தீன் பெற்றுக் கொண்டார். அதற்கடுத்தபடியாக பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யூ. ஜீ. சஞ்சய 109100 ரூபாவைப் பெற்றுக் கொண்டார். போதைப் பொருள் ஒழிப்பில் துணிச்சலாகக் கடமையாற்றிய ஒரேயொரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரான கந்தசாமி கவிதாவுக்கும் சன்மான ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டதுஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் மொத்தம் 97 பொலிஸார் கடமையாற்றுகின்றனர்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹர்ஷ டி சில்வா தலைமையில்இடம்பெற்ற நிகழ்வில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சித் குமார செனவிரத்னஉதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி காரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகளும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பொலிஸாரும் கலந்து கொண்டனர்.

இலங்கை பொலிஸ் தனது 156 ஆவது ஆண்டு விழா நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் 2022 செப்டெம்பர் 03 முதல் 10ஆம் திகதி வரை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.














SHARE

Author: verified_user

0 Comments: