நாட்டில் நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தி அமைதி ஊர்வலம்.
இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பு சர்வோதய சர்வமத குழுவுடன் இணைந்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தி அமைதி ஊர்வலம் ஒன்றை சனிக்கிழமை 24.09.2022 நடத்தியது.
திருகோணமலை 3ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற இந்த அமைதி ஊர்வலத்தின்போது சமகாலச் சூழ் நிலையையும் சமதானத்தையும் வலியுறுத்தும் நிகழ்வின் நினைவாக சர்வோதய நிலையத்தில் மாமரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வுகளில் இளைய சமுதாயத்தினரிடையே சகவாழ்வையும் சமாதானத்தையும் இன சௌஜயன்யத்தையும் எவ்வாறு நிரந்தரமாக கட்டியெழுப்ப முடியும் என்பது பற்றி இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பௌத்த மத குருமார் கருத்துக்களை முன்வைத்தனர்;.
இங்கு சில அம்சங்கள்; கோரிக்கைகளாக வலியுறுத்தப்பட்டன.
அரசியல் மத நிறுவனங்களின் தவறான செயற்பாட்டின் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மத நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் சமாதானக் கருத்தை விதைக்க முன்வரவேண்டும்.
மதகுருமார்கள், அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக இனவாத, மதவாத மெடாழி வாத பிளவுகளை ஏற்படுத்தக் கூடாது.
இனவாத செயற்பாடுகளில் இளைஞர்கள் ஈடுபட்டுவிடக்கூடாது. சில மத ஸ்தாபனங்கள் குளப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் தூபமிடுவதாக உள்ளன. இவை நிறுத்தப்பட வேண்டும். முரண்பாடுகள் தோன்றும்போது அவற்றை பாதிப்பு ஏற்படாத வகையில் கையாள வேண்டும். திருகோணமலை கோணேஸ்வரம் தொடர்பான பிரச்சினையையும் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காகவே கையில் எடுத்துள்ளனர். இந்த நிலைமைகளை மாற்ற அனைத்துத் தரப்பினரும் முயற்சிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment