28 Jul 2022

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏறாவூர் நகர சபை வருமானமின்றி திணறி வருகின்றது. நகர சபைத் தலைவர் நழிம்.

SHARE

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏறாவூர் நகர சபை வருமானமின்றி திணறி வருகின்றது. நகர சபைத் தலைவர் நழிம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏறாவூர் நகர சபையின் வருமானம் மற்றும் அறவீடுகள் பாதியாகக் குறைந்துள்ளதாக ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் 52வது மாதாந்த அமர்வு நகர சபை அலுவலக மண்டபத்தில் வியாழக்கிழமை 28.07.2022 இடம்பெற்றது.

அங்கு மாதாந்த அமர்வை ஆரம்பித்து வைத்து மேலும் உரையாற்றிய நகர சபைத் தலைவர் நழிம், தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏறாவூர் நகர சபையின் வருமானத்திலும் கணிசமான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்க்கை தொழிலை இழந்து வருமானத்தை இழந்து நிம்மதியை இழந்து விரக்தியுற்ற நிலையில் உள்ளது.

அதனால் மக்களிடம் அறவீடுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் நகர சபை வருமானமின்றி சிரமத்தை எதிர்நோக்கியுள்ளது.

அனைத்துத் தொழில் துறைகளுமே கேள்விக்குறியாகியுள்ளது. அன்றாடத் தொழிலாளர்கள் மட்டுமல்ல அரச உத்தியோகத்தர்களும் கூட பொருட்களின் அசுர விலையேற்றாத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருட்களின் அதிகரித்த விலையேற்றத்தினால் நகர சபையும் அதன் சேவை வழங்கல் பாவனைக்கான எரிபொருள் மின் உபகரணங்கள் காகிதாதிகள் உட்பட இன்னபிற சேவை வழங்கும் பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியாமல் திணறி வருகின்றதுஎன்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: