கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராக இருந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமனம்.
கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸ்மி,
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
22.07.2022 திகதியிடப்பட்ட G/EPC/A/GVR/Appt(291) இலக்க கடிதம் மூலம் 25.07.2022 ஆம்
திகதியிலிருந்து அமுலாகும் வரையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளர்கள், பல்வேறு பொது அமைப்புக்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உயர்
அதிகாரிகளுக்கு முன்வைத்த குற்றச்சாட்டுகள் காரணமாக கல்முனை மாநகர சபையின் தற்போதைய
ஆணையாளராக செயற்படும் எம்.சி. அன்சார், விசாரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் இடமாற்றம்
செய்யப்பட்டு குறித்த பதவிக்கு பொறியியலாளர் ரி.சிவலிங்கம் நியமிக்கப்பட்டார். எனினும்,
அவர் பதவியேற்காமல் பலவந்தமாக தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மீண்டும்
.எம்.சி. அன்சார், கல்முனை மாநகர ஆணையாளராக செயற்பட்டார்.
இந்த நிலையில், இலங்கை நிர்வாக சேவையின் முதல் வகுப்பினைச் சேர்ந்தவரான அஸ்மி, கிழக்கு
மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் பதவியிலிருந்து கல்முனை மாநகர
ஆணையாளர் பதவிக்கு இடமாற்றப்பட்டுள்ளார். கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளராகவே
தன்னை நியமிக்குமாறு அஸ்மி வேண்டுகோள் விடுத்த நிலையில், நிரந்தர ஆணையாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளராக வருடங்கள் சிறப்பாக செயற்பட்டவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment