வவுணதீவு பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ. .ஆர் கோர்ட் பதிவு ஆரம்
இந்நடவடிக்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் எதிர்மன்னசிங்கம் உருத்திரன் தலைமையில் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
வழமைபோன்று இத் தினமும் பொதுமக்களுக்கும் பிரதேசத்தில் கடமைபுரியும் அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் சுமூகமான முறையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் கண்காணிப்பின்கீழ்
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அமைவாக பெற்ரோல் வழங்கப்பட்டது.
இதன்போது , பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் சசீந்திரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் உள்ளிட்டோர்
கியூ. ஆர் கோர்ட் பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசிங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மக்கள் எரி பொருளை பெறும் வகையில் ஒழுங்குபடுத்தல், பாதுகாப்பு கடமையினை மேற்கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment