மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் நான்காம் நாள் திருச்சடங்கு சனிக்கிழமை(23) இரவு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தீ பாய்தல் நிகழ்வும் இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ஆலய முன்றலில் அமைந்துள்ள தீக்குழியில் தீ பாய்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பக்கதர்கள், வாய் அலகு போட்டும், தீச்சட்டடி ஏந்தியும் தமது நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றியதையும் அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment