தாக்குதலுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்து 104 நாட்களாக இந்த நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தியமையானது சனநாயக போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்றுருத்து வதாகவும் இலங்கை மீதான சர்வதேசத்தின் அபிப்பிராயத்தை சீர்குழைப்பதாகவும் இருக்கின்றதென இன்று அதிகாலை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக
முன்னணியினால் இன்று (22) நள்ளிரவு காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீது மேற்கொண்ட
தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடபபட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில்
குறிப்பிடுகையில்,
மக்களின் அடையாளமாக
நடத்தப்படும் மேற்போராட்டம் நாட்டில் பல சாதகமன மாற்றங்களையும் நாட்டை கொள்ளையடிக்கும்
அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்பட்டுத்தியிருந்த நிலையில் புதிய ஜனாதிபதிக்கு
வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்குமுகமாக இன்று 22-07-2022) அப்போராட்ட களத்திலிருந்து
வெளியேறுவதற்கான முடிவை நேற்று (21) அறிவித்திருந்த நிலையும் அந்த இளைஞர்கள் மீது நல்லிரவில்
தாக்குதல் நடத்தியுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது
கடந்த சில மாதங்களாக
இந்த நாடும் நாட்டுமக்களும் மிகநோசமான பொருளாதார நெருக்கடியால் வேதனைகளையும் இழப்புகளையும்
தங்கிக்கொள்ளமுடியாதநிலையிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அடுத்தவேலை உணவுக்காக என்னசெய்வதென்று
தவித்துக்கொண்டிருக்கின்டிருப்வர்கள் நாட்டில் இயல்புநிலை ஏற்பட்டு தாங்கள் நெருக்கடியிலிருந்து
விடுபட்டு தங்களுடைய வாழ்க்கையை மீளசிரமைத்துக்கொள்வதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கும்
போது இவ்வாறான தாக்குதல்சம்பவங்கள்
மக்களுக்கு ஆட்சியாளர்கள்
மீதான நம்பிக்கையை இழக்கச்செய்துவிடும் ஆகவே புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும்
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த மாற்றத்திற்கு காரணமான இளைஞர்களோடும் சிவில்
மற்றும் அரசியல் துறைசார்ந்த நிபுணர்களென அனைத்து தரப்புகளோடும் கலந்துரையாடி நாட்டை
முன்னோக்கி கொண்டுசெல்லுவதற்கான பொருத்தமான குறுகிய கால செயற்றிட்டமொன்றை உருவாக்கிக்கொள்ளுவதோடு
அரசியலமைப்பு மாற்றத்தோடு விரைவாக பொதுத்தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுத்து மக்களுக்கான
வாய்ப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment