நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றவுள்ள நிலையில் இம்முறை கிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 28882 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
அதற்கு அமைவாக தமிழ் மொழி மூலம் 22805 பரீட்சார்த்திகளும் சிங்கள மொழி மூலம் 6077 பரீட்சாத்திகளும் அடங்குவர்.அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 53 பிராந்திய சேகரிப்பு நிலையங்களும் 407 பரீட்சை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 125 பரீட்சை நிலையங்களும், 14 இணைப்பு அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், 17238 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதில் 8053 ஆண் பரீட்சாத்திகளும், 9185 பெண் பரீட்சாத்திகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்ப மாவட்டத்தில் க.பொ.த சாதரண தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் கொவிட் பாதிப்பேற்பட்ட மாணவர்களுக்கு பரீட்சைகளை எழுத தேவையான ஏற்பாடுகள் உரிய பரீட்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் எந்தவித இடர்பாடுகளும் அற்ற நிலையில் பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவருகின்றது.
அதனிடையே மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் (சிசு சரிய) பஸ்வண்டிகளுக்கு தங்குதடையின்றி எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கான முன்னெடுப்பினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை மற்றும் இலங்கை போக்குவரக்கு சபையும் இணைந்து இவர்களுக்கான எரிபொருளினை இலங்கை போக்குவரத்து சபையில் இருந்து பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் யு.யுவநாதன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment