மண்ணெண்ணெய்க்காக அலைமோதும் மக்கள் கூட்டம்.
அதிகாலையிலேயே வரிசையில் இடம்பிடிக்க ஆண்களும் பெண்களும் முண்டியடித்தனர். தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது பெண்களும் வயோதிபர்களும் கூட அவஸ்தைப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
ஒருவருக்கு 300 ரூபாவுக்கான மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்பட்டது. சுமார் 11 மணித்தியாலம் இந்த மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்றது.
எவ்வாறாயினும் வரிசையில் நின்ற அனைவரும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு திரும்பிதாக வரிசையில் நின்றோர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment