18 Apr 2022

கடந்தகால யுத்தம் நமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளது – பிரசாந்தன்.

SHARE

கடந்தகால யுத்தம் நமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளதுபிரசாந்தன்.

கடந்தகால யுத்தம் நமக்கு பல படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளது. அதுபோன்று நமது சமூகத்தின் முதுகெலும்பாக இருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரிழந்தும், பல்லாயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்தில் தலைமை தாங்கும் நிலமைக்குத் தள்ளப்பட்டுஉடல் அவையங்களையும், பொருளாதாரங்கள், மற்றும் வாழ்வாதாரங்களையும் இழந்து வாழக்கூடிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம். இச்சூழ்நிலையில் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு எமது கிராமங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

கல்வியாளர்களைக் கௌரவிக்கும் நிழ்வு மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு  சக்தி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. முனைத்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தெ.புவிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழர்களின் இருப்பையும், தமிழர்களின் பொருளாதாரத்தையும் வலுவாக்க வேண்டுமாக இருந்தால், முதலில் நமது வீட்டுப் பொருளாதாரத்ததையும், கல்வியையும், வலுவாக்கு வேண்டும். கடந்த யுத்தத்தின்பால் தமிழர்களின் கல்வி மிகவும் நலிவடைந்துள்ளது. எமது தலைவர் சி.சந்திரகாந்தன் அவர்கள் 4 ஆம் ஆண்டுதான் படித்திருக்கின்றார் அவருக்கு ஆங்கிலம், சிங்களம் பேசத் தெரியாது என பட்டிருப்பும் தொகுதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் அவ்வாறு படிக்காமல் போனதற்குரிய காரணம்.  அவரது வீட்டுச் சூழலோ அல்லது வேறு காரணங்களோ அல்ல 1974 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படைய்ல் இளைஞர்களின் கைகளில் ஆயுதம் திணிக்கப்பட்டதன் அடிப்படையில் மண்ணை மீட்பதற்கு கல்வியைத் துறந்துவிட்டு போர்களம் சென்றவர். தன்னுயிரை துச்சமென நினைத்து மக்களுக்காக போராடச் சென்ற ஒருவருக்கு மட்டக்களைப்பைச் சேர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி கொடுக்கின்ற பட்டம் படிக்காதவன் என்று. சமூகத்திற்காக கஸ்ற்றப்பட்டவர்களை சமூகம் போற்ற வேண்டுமே தவிர தூற்றக்கூடாது.

மிக இளவயத்தில் எமது தலைவர் கிழக்கு மகாணத்தின் முதலமைச்சராக வந்த பின்னர்தான் மட்டக்களப்பு மாவட்டம் பல அபிவிருத்திகளைக் கண்டது. நாட்டின் நிருவகத்தை நடைமுறைப்படுத்துவது இருசாரார். ஓன்று மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள், மற்றயவர்கள் அரச உத்தியோகஸ்த்தர்கள். எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைத்து இக்கிராமத்தையும், இப்பிரதேசத்தையும் வலுவானதாக மாற்றியமைக்க வேண்டும். வடகிழக்கில் மாத்திரம் சுமார் 32 வருடகாலம் யுத்தத்தின்பால் ஈக்கப்ட்டிருந்தது ஆனால் தற்போது ஏற்பட்டிருப்பது ஒட்டு மொத்த நாட்டுக்குமான பிரச்சனையாகும். ஓவ்வொரு பினைச்சனைகளும். ஓவ்வொரு படிப்பினைகளைத் தருகின்றன.

மட்டக்களப்பு போதனா வைத்தியாலைக்கு 126 வைத்தியர்கள் இன்னும் தேவையாக உள்ளன. மட்டக்களப்பு மேற்கு கல்வி  வலயத்தில் இன்னும் 75 அதிபர் வெற்றிடங்கள் உள்ளன. ஆரம்பக் கல்வியைக் கற்பிப்பதற்கு இன்னும் 75 பாடசாலைகளில் ஆசிரியர் தட்டுப்பாடுகள் உள்ளன. இவ்வாறான தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய தலைமைகளுக்கு மக்கள் விசுவாசமாக செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: