18 Apr 2022

நம்பிக்கையில்லாப் பிரரேரணையில் எனக்கு உடன்பாடு இல்லை – பிள்ளையான் எம்.பி.

SHARE

நம்பிக்கையில்லாப் பிரரேரணையில் எனக்கு உடன்பாடு இல்லைபிள்ளையான் எம்.பி.

நான் இக்கப்பாட்டு அரசியல் செய்யும் நபர் எதிர்க்கட்சியால் அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரரேரணையில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்பிக்கையில்லாப் பிரரேரணையை அவர்கள் சபையில் சமர்ப்பிக்கட்டும். தற்போது நாம் நாட்டின் சூழலை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். குளப்பமில்;லாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டுபோவது தொடர்பில் நான் ஆராய்கின்றேன். நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதியும், அரசியல்வாதிகளும் மக்களும் உணர்ந்துள்ளர்கள். நாடு மிகவும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதிலிருந்து நாட்டைமீட்டெடுப்பதற்கு நாங்கள் பாடுபடவேண்டும். அந்தப் பக்கத்தில்தான் நான் நிற்கின்றேன். என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கல்வியாளர்களைக் கௌரவிக்கும் நிழ்வொன்று மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. முனைத்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தெ.புவிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலழிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

எமது பகுதிகள் பொருளாதாரத்தில் முன்னேறவேண்டுமாக இருந்தால் கல்வித்துறையில் பாரிய வளர்ச்சியை ஈட்டவேண்டும். பட்டிருப்புத் தொகுதியிலுள்ள கல்வி வளத்தை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனாலும் பட்டிருப்புத் தொகுயில் ஆசிரியர்களின் தேவை அதிகமாகவுள்ளது. அதுபோல் அடுத்து வரும் 10 வருடங்களில் நிலப்பிரச்சனை வரவுள்ளது.

எனினும் நாடு தற்போதிருக்கின்ற மிகப் பெரிய சூழலிலிருந்து மீண்டெழ வேண்டும். நாம் தற்போதுள்ள அரசாங்கத்துடன் இணைக்கப்பாட்டு அரசியல் செய்து வருகின்றோம். ஜனாதிபதி அவர்களுக்கு மக்கள் கொடுத்த ஆணைக்காலம் இன்னும் முடியவில்லை. அந்தக்காலம் முடிவதற்கு முன்னர் ஒரு அழுத்தம் எழுந்துள்ளது. அதற்கும் நியாயமான காரணங்களும் உள்ளன. அதுபோல் 13 மணித்தியாலங்கள் மின்சாரத்தை தடைசெய்தபோது மக்கள் அரசாங்கத்தை திட்டித் தீர்த்திருப்பார்கள். இதற்குத் தீர்வாக முன்னுக்குக் கொண்டு வரவேண்டிது மக்களிடத்தில்தான் உள்ளது. எனினும் அரசாங்கத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் அதற்குத் தீர்வு கிடைக்காது. எனவே மிகக் கவனமாக இந்த நிலையிலிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

நாட்டுக்கு என்ன வினை வந்திருக்கின்றதோ தெரியாது. கடந்த காலங்களில் யுத்தம் இடம்பெற்றிருந்தது. எமக்குப் பின்னோக்கியிருந்த சிங்கப்+பூர், மலேசியா போன்ற நாடுகள் தற்போது பொருளாதாரத்தில் உச்சைத்தைத் தொட்டிருக்கின்றன. இந்நிலையில் நமது நாட்டில் ஏற்படுகின்ற ஆர்ப்பாட்டங்களும், நாட்டை இன்னும் குட்டிச் சுவராக்குகின்ற நிலமைக்குத்தான் தள்ளப்படுகின்றன.

நாங்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் அல்ல கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் தங்களுடைய தலைவிதியைத் தீர்மானிக்கின்ற வலுவான சக்தியாக ஆக்கப்படல் வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம். அதனை விட்டுக் கொடுக்க முடியாது. இதற்கு பல ஊடகங்களும்,  மக்கள் சுயாதீனமாக போராடுகின்றார்கள் என்ற கருத்தியலை உருவாக்கினாலும்கூட அதற்கு பின்புலத்தில் பல சக்திகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சக்திகள் நினைப்பது நடைபெற்றால், அதில் அதிகூடிய ஆபத்தை சந்திக்கும் மாகாணமாக கிழக்குமாகாணம் உள்ளது.

என்னைப பொறுத்தவரையில் நாட்டுக்கு விசுவாசமாகவும். நாட்டிலுள்ள பிரச்சனைகள் நாட்டுக்குளேயே தீர்வுகாண வேண்டும். தற்போது மக்களுக்கு எழுந்திருக்கின்ற கோபத்தை எந்த அரயில் சக்தியாலும், தீர்த்து வைக்க முடியாது. தற்போது எழுந்திருக்கின்ற விடைங்கள் வன்முறையாக மாறினால் நாடும் இன்னும் பாதாழத்திற்குள் விழுந்துவிடும். ஆனாலும் அவர்களை இரத்தம் சிந்த வைக்க வேண்டும் என பின்னாலுள்ளவர்கள் செயற்படுகின்றார்கள். எனவே நாடு எதிர்கொண்டிருக்கின்ற இந்நிலைமையை அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ பேசுகின்ற நிலமையாக நான் பார்க்கவில்லை. இதனை அரசியல் ரீதியாக ஆழமாகப்பார்த்தாலே தவிர ஆராயமுடியும். வெறுமனே உணர்ச்சி வசப்பட்டு மேற்கொள்ள முடியது என அவர் இதன்போது தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: