இரசாயன உரம் நிறுத்தப்பட்டுள்ளமையால் விவசாயத்தில் மக்கள் கோடிக்கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள் - பிரதேச சபை தவிசாளர் யோகநாதன்.
இலங்கையில் எப்போதுமில்லாத வகையில் அனைத்துப் பொருட்களுக்கும் பலத்த விலையுயர்வுகள் மட்டுப்படுத்தாத வண்ணம் தொடற்சியாகச் சென்று கொண்டிக்கின்றது. இது வேதனைக்குரிய விடையமாகும் எமது பிரதேசம் விவசாயத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கும் பெயர்போன பிரதேசமாகும். இத்தொழிலை மக்கள் மேற்கொள்ள முடியாதுள்ளது. இரசாயன உரம் நிறுத்தப்பட்டுள்ளமையால் விவசாயத்தில் மக்கள் கோடிக்கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளார்கள்.
என மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைச் தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்துள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 50 வது சபை அமர்வு களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
எரிபொருட்களின் விலையயேற்றம், இரசாயன உரம் இன்மை, பொருட்களின் விலையேற்றம், மின்சாரத் தடை, அனைத்தையும் உடன் அரசாங்கம் மட்டுப்படுத்த வேண்டும் இது தொடற்றியாக எகிறிக் கொண்டிருப்பதை எமது சபையின் சார்பில் எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசாங்கம் மக்களுக்கு நிலைவாசிகளை உடன் மட்டுப்படுத்த முன்வரவேண்டும். இந்நிலையில் எமது பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், கற்பிணித் தாய்மாருக்கான சமத்துணவு வேலைத்திட்டம், உள்ளிட்ட அனைத்தையும் தற்போதைய காலகட்டத்தில் சீராகச் மேற்கொள்ள முடியாதுள்ளன.
இரவும் பகலும் தொடற்சியாக விலையேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதனால், பிரதேச சபைக்குரிய வருமானத்திலும் தளம்பல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் நாட்டில் சமாதானத்துடன், விலைவாசிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இச்சபை அமர்வின்போது, எருவில் மயான வீதியைப் புணரமைத்தல், பாலர் பாடசாலைகளுக்குச் சான்றிதழ் வழங்குதல், சபை அமர்வுக்கு கலந்து கொள்வதற்கு உத்தியோக பூர்வமாக ஊடகவியலாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்தல், 75 மில்லியன் ரூபா நிதியில் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் மீன் விற்பனைக்குரிய கட்டடம் கட்டுதல், ஜே.சி.பி வாகனத்தை மணித்தியாலத்திற்கு 4000 ரூபாவிற்கும், தண்ணீர் தாங்கி ஒன்றை 1000 ரூபாவுக்கும் வாடகைக்கு விடல், பிரதேச சபை செயலாளர், தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர், மின் பராமரிப்பாளர் ஆகியோருக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளுக்கு அனுமதித்தல், பிரதேச சபையின் கீழுள்ள நூலகம், ஆயள்ளவேத வைத்தியசாலை உள்ளிட்ட காரியாலயங்களுக்கு கைரேகை இயந்திரம் பொருத்துதல், மகிழூர் பாலர் பாடசாலைக்கு தளபாடங்களைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment