போர்த்தாங்காய் அடிக்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட்டைக்கல்லாறு கிராமத்தில் வருடாந்தம் போர்த்தேங்காய் அடிக்கும் பாரம்பரிய நிகழ்வு அக்கிராமத்தில் அமைந்துள்ள கண்ணகியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்றது.
சித்திரை வருடப்பிறப்பிறப்பிற்கு அடுத்த நாள் 15 ஆம் திகதி ஆரம்ப மான இந்நிகழ்வு இவ்வாரம் முழுவதும் மாலை 5 மணி முதல் நடைபெறவுள்ளது.
சோழர் காலத்திலிருந்து தற்போது வரையில் தமது கிராமத்தில் தொன்று தொட்டு பாரம்பரியமாக தமிழரிகளின் மரபு பேணும் நிகழ்வாக இதனை தாம் நடாத்தி வருவதாக அக்கிராமத்து பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமத்திலுள்ள மக்கள் தாய் வழி, மற்றும் தந்தை வழி என வடசேரி, தென் சேரி என பிரித்து, இரு பகுதிகளாக இப்போர்த் தேங்காய் அடிக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றன. வடசேரி பிள்ளையார் என்றும், தென்சேரி அம்பாள் என்றும், இறுதியில் தென்சேரி வெற்றி பெற்றதும் நிகழ்வு நிறைவு பெறும்.
0 Comments:
Post a Comment