26 Dec 2025

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் பெருங்கதை பெருவிழா.

SHARE

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் பெருங்கதை பெருவிழா.

விநாயகருக்கான பிரதான விரதமாக கொள்ளப்படும் விநாயகர் காப்பு விரதத்தின் இறுதி நாள் பெருங்கதை பெருவிழா வியாழக்கிழமை(25.12.2025) செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இடம்பெற்றது.

கடந்த 05.12.2025 ஆரம்பமாகிய இவ்விரதம் அடியார்க்களால் 21 நாட்கள் நேன்பிருந்து இவ்விரதத்தை அனுஸ்ட்டித்தார்கள். 

ஆலயத்தில் பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி, பாராம்பரிய முறைப்படி பிள்ளையார் கதை படிக்கப்பட்டு, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, சுவாமி உள்வீதி வலம் வந்தது. 

ஆலய கிரியை வழிபாடுகள் யாவும் ஆலயப்பிரத குருசிவ ஸ்ரீ திருவேரக சர்மா தலைமையிலான குருமார் குழுவினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












 

SHARE

Author: verified_user

0 Comments: