5 Aug 2021

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து இருவர் படுகாயம்.

SHARE

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து இருவர் படுகாயம்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிராங்குளத்தில் புதன்கிழமை(04) மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சக்கிள் ஒன்று பணித்துக் கொண்டிருந்த வேளை அதே திசையில் எதிரே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக திரும்புவதற்கு முற்படுகையில் இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடு ஒன்று மோத்தியதால் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக இதனை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இருவரும்  காயங்களுக்குட்பட்டு ஆரையம்பத்தி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.












SHARE

Author: verified_user

0 Comments: