5 Aug 2021

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஊடாக மேற்கொள்ளப்பட்ட வடிகானமைப்புத் திட்டம் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு.

SHARE

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஊடாக மேற்கொள்ளப்பட்ட வடிகானமைப்புத் திட்டம் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை ஊடாக வவுணதீவுப் பிரதேசத்தின் கரவெட்டிக் கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட வடிகான் திட்டத்தை பிரதேச செயலாளரிடம் உத்தியோக பூர்வமாக புதன்கிழமை(04) கையளிக்கப்பட்டது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை செயலாளர் சா.மதிசுதன் இத்திட்டத்தை உத்தியோக பூர்வமாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரனிடம் கையளித்தார்.

இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் .வசந்தராசா, பொருளாளர் .சக்திவேல், கிளை நிறைவேற்று உத்தியோகஸ்த்தர் திருமதி பி.வேணுஷா, திட்டத்திற்குப் பொறுப்பான திட்ட உத்தியோகஸ்த்தர் எஸ்.ருத்திராஜ், மற்றும் கிளை உத்தியோகஸ்த்தர் .விஸ்வநாத், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: