17 Oct 2020

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் மேய்ச்சல்தரை காணியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு கூறி ஆர்ப்பாட்டம்.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் மேய்ச்சல்தரை காணியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு கூறி  ஆர்ப்பாட்டம்.மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மேய்ச்சல்தரை காணியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு கூறி  ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை மக்கள் தேசியக்கட்சியின்  ஏற்பாட்டில்  சனிக்கிழமை (17) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்னுகாந்தனின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகர் காந்திப் பூங்கா முன்னால் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மக்கள் தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மயிலந்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களின் கேரிக்கையை  நிறைவேற்றவும், மயிலந்தமடு, மாதவனை மேச்சல் தரையினை எமது மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு சட்ட ரீதியாககைளிக்கவும், பல ஆண்டுகளாக எமது மாவட்ட கால் நடை பண்ணையாளர்கள் தமது கால் நடைகளை பராமரித்த காணியை அவகரக்கவேண்டாம் போண்ற விடயங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் முன்வைத்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: