என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கே அவர்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. எனினும் அவர்கள் தமிழ் மக்களுக்கு விரோதமாகச் செயற்படமாட்டார்கள் என்பதை நாங்கள் அவர்கள் இருவரையும் நம்புகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், ஆகிய இருவரும் 20 திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்கவேண்டும், அவ்வாறு அவர்கள் ஆதரவாக வாக்களித்தால் மக்களை அவர்களை எதிர்க்கவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களாக கடந்த ஆட்சியிலிருந்து இந்த ஆட்சிவைரக்கும், பௌத்த துறவிகள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை திட்டமிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டு வருகின்றார்கள். இதற்கு தற்போதைய அரசும் முழு ஆதரவை வழங்கியுள்ளது. கடந்த ஆட்சியின்போது, கெவுளியாமடு கிராமத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. மாதவனை, மைலத்தமடு, புணாணைக் கிராமங்களில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான குடியேற்றங்களுக்கு பௌத்த துறவிகள் மிகவும் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றார்கள். ஆனால் தமிழ் பகுதிகளில் சிங்களக்குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். புணாணை, கெவுளியாமடு ஆகிய பகுதிகளில் திட்டமிட்டு குடியேறுபவர்களுக்கு வீட்டுத்திட்டங்களைக் அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்நிலையில மாதவனை, மைலத்தமடு கிராமங்கள் செங்கலடி, கிரான் பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளாகும், அவ்வாளான இடங்களை பொலநறுவை மற்றும் அம்பாறை மாட்டங்களுடன் இணைப்பதற்காக மாகாவலித்திட்டம் என்ற போர்வையில், கிட்டத்தட்ட 60இற்கு மே;றஙபட்ட சிங்களக் குடும்பங்களுக்கு விவசாயச் செய்கைக்காக காணி வழங்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னால் கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களும் உடந்தையாக இருக்கின்றமை வேதனையான விடையமாககும்.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற ஆளுனர் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் அவர் தமிழ மக்களுக்கு விரோதமாக செயற்படுவாரானால், அந்த ஆளுனர் தேவையா இலலையா என்பதை இந்த அரசாங்கம் மீள்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கிழக்கில் தமிழர்கள் 40 வீதமும், முஸ்லிங்கள் 37 வீதமும், சிங்களவர்கள் 23 வீதமும் எனவே கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகச் செயற்படும் கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இந்நிலையில் மட்டக்களப்பு மவாhட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்கள் அமையப்பெறும் மாதவனை, மற்றும் மைலத்தடு ஆகிய பிரதேசங்களுக்கு நேரடிகாச் சென்று பார்வையிட்டு உரிய இடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உரியதுதான் என்பதை மிகவும் தெழிவாகக் கூறிய பெருமை அவரையேசாரும், இதுவரையியல் யாரும் அவ்வாறான கருத்தை யாரும் மிகவும் தெழிவாகக் கூறவில்லை. இந்நிலையில் அவர் சமூகம் சார்ந்த செயற்பட்டதன் காரணத்தினாலா அவர் இடமாற்றப் செய்யப்பட்டுள்ளார் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தைப் பிரதிநிதிப்படுத்துமட் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்யாமலிருப்பதும் வேதனைக்குரியமாகும். இதனால் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள அரச உயர் அதிகாரிகள் மக்கள் நலன் சார்ந்து வேலை செய்வதற்கு அச்சமைந்துள்ளார்கள்.
தற்போது பெரும்போக வெளாண்மைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விதைத்த நெல் வயல்கள் வரண்டுபோய் கிடக்கின்றன. 25000 மேற்பட்ட ஏக்கரில் மேட்டுநிலப் பயிற் செய்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் 7500 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வறுமையில் வாடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் மழை பெய்யா விட்டால் விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவிகளை மேற்கொள் முன்வரவேண்டும், மட்டக்களப்பபு மாவட்டத்திலுள்ள 110000 இற்கு மேற்பட்ட பசு மாடுகளும், 65000 இற்கு மேற்பட்ட எருமை மாடுகளும், குடிப்பதற்கு நீரின்றி வாடுகின்றன. எனவே எதிர்காலத்தில் விவசாயம், மேட்டுநிலம், கால்நடைகள் தொடர்பிலும் முறையான திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment