மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து மீண்டும்
நகர் பகுதிக்குள் வந்த காட்டு யானைகள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், மற்றும் குருக்கள்மடம், பகுதிகளில் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மித்ததாகவுள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் வியாழக்கிழமை(23.10.2025) இரண்டு காட்டு யானைகள் அங்குமிங்கும் நடமாடித் திரிவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பு பகுதியிலிருந்து மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து மீண்டும் எழுவாங்கரைப் பகுதியான நகர் பகுதியிலுள்ள சதுப்பு நிலங்களில் சுற்றித்திரியும் இந்த காட்டு யானைகளை அப்புறப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மக்களின் கோரிக்கைக்கு இணங்க அப்பகுதிக்கு வருகைதந்த வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள், காட்டு யானைகள் துரத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மண்முனை தென் எருவில் பற்று நகர் பிரதேசத்திற்கு வருவதும் பின்னர் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து நீந்திச் செல்லதுமாகவே உள்ளதாகவும், இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் தமது வேளாண்மைச் செய்கை, மேட்டுநிலப் பயிற் செய்கை மற்றும் ஆற்றுத் தொழில் போன்றவற்றிற்குச் செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே இதற்கு நிரந்தரமான ஓர் தீர்வை உரிய அதிகாரிகள் பெற்றுத் தரவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment