களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டுக்
கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி.
மட்டக்களப்பு மாவட்டம் களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு கழகத்திலிருந்து உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(26.10.2025) மாலை களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடத்தையும், சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
கடந்த மூன்று நாட்களாக போட்டிகள் இடம்பெற்று இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றதுர். இப்போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 45 அணிகள் பங்குபற்றியிருந்தன.
இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ,போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன், படுவான்கரை உதைப்பந்தாட்ட சம்மேளத்தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது போட்டியில் முதலிடம், இரண்டாம் பெற்ற அணிகளுக்கு பதக்கங்களும், கேடயங்களும், காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment