களுதாவளை திருஞான சம்பந்தர் குருகுலத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை திருஞான சம்பந்தர் குருகுலத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (26.10.2025) இடம்பெற்றது.
களுதாவளை திருஞான சம்பந்தர் குருகுலத்தின் தலைவர் ப.குணசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், பிரதேச சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்த்தர், குருகுல மாணவர்கள், அவர்களின் உறவினர்கள், பாடசாலை மாணவர்கள், குருகுலத்தின் நிருவாகத்தினர் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுவர்களின் கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதோடு சிறார்களுக்கு இனிப்புப் பண்டங்களும், பரிசுப் பொருட்களும், வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு, சிறுவர் தினம் தொடர்பான உரைகளும் இதன்போது இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment