20 Oct 2020

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்க பொது இடங்களில் விழிப்புணர்வும் தொற்று நீக்கி முகக் கவசங்கள் விநியோகமும்.

SHARE

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்க பொது இடங்களில் விழிப்புணர்வும் தொற்று நீக்கி முகக் கவசங்கள் விநியோகமும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்க பொது இடங்களில் விழிப்புணர்வும் தொற்று நீக்கி முகக் கவசங்கள் துண்டுப் பிரசுர விநியோகமும் மாவட்டம் தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

சுகாதாரப் பிரிவு பொலிஸ் உள்ளுராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பினால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

செங்கலடி பொதுச் சந்தை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை 20.10.2020 இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய மலேரியாத் தடை இயக்க வைத்திய அதிகாரியும் சுகாதார வைத்திய அதிகாரியுமான இளையதம்பி ஸ்ரீநாத் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைத் தலைவர் நாகமணி கதிரவேல் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். சபேந்திரராஜா உள்ளிட்ட அதிகாரிகளும் பொலிஸ் உத்தியோகத்தர்களும்  மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பின் அலுவலர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய சட்டத்தரணி பணிப்பாளர் மயூரி ஜனன்

தற்போது நாட்டில் மீண்டும் உக்கிரமடைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகூடிய சிரத்தை எடுத்து சுகாதார விழிப்புணர்வுகளை ஊட்டவேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது.

அதன் காரணமாக இத்தகைய சுகாதார முகக் கவசங்களையும் தொற்று நீக்கிகளையும் இலவசமாக அனைவருக்கும் வழங்கி வருவதோடு விழிப்புணர்வத் தண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றோம்.

அத்துடன் இந்த வேலைத் திட்டத்திற்குச் சமாந்தரமாக மக்கள் கூடுமிடங்களைக் கிருமித் தொற்று நீக்கும் வேலைத் திட்டத்தையும் அரச துறை பொது நிறுவனங்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்போடும் மேற்கொண்டு வருகின்றோம்.

சமகாலத் தேவையைக் கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பிற்கு முன்னுரிமை வழங்கி அடிநிலைக் கிராம மக்களுக்கு அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றோம்” என்றார்.
















SHARE

Author: verified_user

0 Comments: