வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாசிவன்தீவு கிராம மக்களுக்கு நிவாரணம்.
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்தில் அமையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 90 குடும்பங்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிவாரணங்கள் சனிக்கிழமை (04) வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பாய், நுளம்பு வலை, சறம், சமயல் பாத்திரங்கள், வெட்சீட், துவாய், உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.சவந்தராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தொண்டர்கள். நாசிவன்தீவு கிராம இளைஞர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது பலந்து கொண்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment