5 Jan 2020

தமிழ் மக்களின் ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியத்தொடங்கி விடவே அவர்கள் வடக்கு கிழக்கு வெளியே அரசியல் பணிகளை முன்னெடுக்க தொடங் கியுள்ளனர் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

SHARE
தமிழ் மக்களின் ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியத்தொடங்கி விடவே அவர்கள் வடக்கு கிழக்கு வெளியே அரசியல் பணிகளை முன்னெடுக்க தொடங் கியுள்ளனர் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
தமிழ் மக்களின் ஆதரவு தமிழ் தேசிய கூட்டமைப்பு சரிய தொடங்கி விடவே தற்போது அவர்கள் வடக்கு கிழக்கு வெளியே தமது தேசிய பட்டியல் ஆசனத்தை தக்கவைக்கவே அரசியல் பணிகளை முன்னெடுக்க தொடங் கியுள்ளனர் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (05) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியளார் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு தமிழர்களின் இருப்பை கேள்வியாக்கி விட்டு இன்று வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளமை அங்குள்ள தமிழர்களின் இருப்பை கேள்வியாக்கவே தற்போது முயற்சி செய்து வருகின்றாற்கள். கிழக்கு மாகாணத்தில் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெறுக்க தொடங்கி விட்டார்கள் மாற்றுத் தலைமைகளைத் தேடத் தொடங்கி விட்டார்கள் வடக்கிலும் இதே நிலமைதான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவு சரிய தொடங்கி விட்டது. இந்நிலையில்தான் தற்போது அவர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே தமது தேசிய பட்டியல் ஆசனத்தை தக்கவைப்பதற்காக அரசியல் பணிகளை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். மக்களுக்காக அரசியல் பணியாற்ற வருபவர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். தங்களின் இருப்பை தக்கவைப்பதற்காக வாக்குகளை பயன்படுத்த கூடாது. வடக்கு கிழக்கிற்கு வெளியிலுள்ள மக்களை  நிம்மதியாக வாழவிட்டால் அது பெரும் உதவியாக இருக்கும். என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: