22 Jun 2019

தேவநாயகம் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 13 அமைச்சர்களின் கையிலே 30 வருடங்களாக மாறி, மாறி, இன்னும் தீர்க்கப்படாமலிருக்கின்ற இந்தப்பிரச்சனையை, மிக மிக, குறுகிய காலத்திற்குள் பிரதேச செலயகமாக தரமுயர்த்தித் தருவேன் - ஞானசார தேரர்.

SHARE
தேவநாயகம் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, 13 அமைச்சர்களின் கையிலே 30 வருடங்களாக மாறி, மாறி, இன்னும் தீர்க்கப்படாமலிருக்கின்ற இந்தப்பிரச்சனையை, மிக மிக, குறுகிய காலத்திற்குள் பிரதேச செலயகமாக தரமுயர்த்தித் தருவேன் - ஞானசார தேரர். 
கே.டப்ளியு.தேவநாயகம் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு,  13 அமைச்சர்களின் கையிலே 30 வருடங்களாக மாறி, மாறி, இன்னும் தீர்க்கப்படாமலிருக்கின்ற இந்தப் பிரச்சனையை, இந்தப்பிரதேச செயலகத்தை மிக மிக, குறுகிய காலத்திற்குள் பிரதேச செலயகமாக தரமுயர்த்தித் தருவேன் என்பதை இந்த உண்ணா விரதத்திலிருக்கின்றவர்களின் முன்னால் வைத்து மக்களுக்குத் தெரிவிக்கின்றேன். எனவே இந்தப்பிரச்சனையை தொடர்ந்த நீடிக்காமல், இந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்கின்ற முஸ்லிம் தரப்பினரும், இந்த மக்களின் போராட்டத்திற்கு தீர்வு காண முன்வரவேண்டும். என அவர் தெரிவிகத்தார். 

என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார். கல்முனைக்கு சனிக்கிழமை (22) விஜயம் செய்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கொண்ட குழுவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் கலந்துரையாடிவிட்டு மக்கள் மத்தியிலே கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் மத்திக்கின்றோம். ஒரு அகிம்சை ரீதியான போராட்டத்தின் இறுதி வடிவம்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டமாகும். 30 வருடகாலமாக இந்த தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதியை கவனத்திலெடுத்து, இங்கு மதத் தலைவங்கள், இளைஞர்கள் என பலரும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தப் போராட்டம் உண்மையான இறுதியான போராட்டமாகும். அந்தப் போராட்டத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் மக்களை வழிநடாத்திய அரசியல் வாதிகள்தான். இந்தப் பிரச்சனைகாரணமாக மக்களிடையே சந்தேகப்பார்வை ஏற்பட்டுள்ளது. சமூக ஒற்றுமை சிதைந்து போயிருக்கின்றது. 

மிகவும் குறுகிய காலத்திற்குள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கைகயை வெற்றிபெறச் செய்வேன் என்பதை நான் இவ்விடத்தில் பெறுப்புடன் கூறிக் கொள்கின்றேன். ஒரே நாட்டில் வாழ்கின்ற பிரஜைகளுக்கு வெவ்வேறு சலுகைகள் இருக்க முடியாது. வீதியின் ஒருபக்கமும், நரகமும் மறுபக்கம் சுவர்க்கமாகவும் இருக்கவும் முடியாது. இதனை சாதாரண மடக்களிடம் கொண்டு செல்லக்கூடாது அவ்வாறு கொண்டு சென்றால் தமிழ் முஸ்லிம் பிரச்சனையாக மாறிவிடும். ஆனால் இவ்வாறு வருவதற்கு அரசியல்வாதிகள் இதனை விரும்புகின்றார்கள். அரசியல்வாதிகள் அவர்களது அபிலாசைகளுக்காக சில விடையங்களை உருவாக்குகின்றார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை அவர்களது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகின்றார்கள். எனவே சாதாரண மனிதர்களாகிய நாங்கள் அரசியல் வாதிகளின் வேடங்களைக் கலைக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் ஒன்றுமே இல்லை. தேசிய நிகழ்ச்சி நிரல் எஎன்ன ஒரு நிகழ்ச்சி நிரல் மாத்திம்மான் உள்ளது. நாங்கள் அற்பணிப்பது ஒரு நாடு, சட்டத்திற்கு மாத்திரம்தான். இந்த நாட்டில் ஒவn;வாருவருக்கும் வெவ்வேறு சட்டங்கள் இருப்பதற்கு இடம் கொடுக்க முடியாது. தேசிய கீதத்தில் குறிப்பிடப்படுவது நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்றுதான் தெரிவிக்கப்படுகின்றது. எனவே தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லிங்களும், இந்தப் பிரச்சனைகளை உணர்ந்து செயற்பட வேண்டும். 

கே.டப்ளியு.தேவநாயகம் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு,  13 அமைச்சர்களின் கையிலே 30 வருடங்களாக மாறி, மாறி, இன்னும் தீர்க்கப்படாமலிருக்கின்ற இந்தப்பிரச்சனையை, இந்தப்பிரதேச செயலகத்தை மிக மிக, குறுகிய காலத்திற்குள் பிரதேச செலயகமாக தரமுயர்த்தித் தருவேன் என்பதை இந்த உண்ணா விரதத்திலிருக்கின்ற வர்களின் முன்னார் வைத்து மக்களுக:குத் தெரிவிக்கின்றேன். எனவே இந்தப்பிரச்சனையை தொடர்ந்த நீடிக்காமல், இந்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கூடுhது என்கின்ற முஸ்லிம் தரப்பினரும், இந்த மக்கின் போராட்டத்திற்கு தீர்வு காண முன்வரவேண்டும். என அவர் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: