கல்முனையில் வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் முன்நெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை முதல் நீராகாரம் மாத்திரம் அருந்தி தீர்வு கிடைக்கும்வரை தொடர்ச்சியாக முன்நெடுப்பு.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி சர்வமத தலைவர்கள், மற்றும் அப்பகுதி இளைஞர்கள் உள்ளிட்ட 5 போர் முன்நெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை வரை 6 வது நாளாக தொடர்கின்றது. இந்நிலையில் சனிக்கிழமை(22) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கல்முனைக்கு விஜயம் செய்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கொண்ட குழுவினர் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினுள் சென்று மூடிய அடைக்குள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். அக்கலந்துரையால் இடம்பெற்ற அறைக்குள ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் அக்கலந்துரையாடலை முடித்துக் கொண்ட கலகொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் கொண்ட குழுவினர் பிரதேச செயலகத்தின் முன்னால் உண்ணாவிரம் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினர். முதலில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்தின தேரரிடம் கலகொட அத்தே ஞானசாரதேரர் இரகசியமாக அவரின் காதோரமாகச் சென்று ஏதோ பேசினார். பின்னர் பிரித் ஓதப்பட்டு போத்தலில் அடைக்கப்பட்ட நீரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் வர்களின் கையில் ஊற்றி அருந்த வைத்ததுடன் நீரை தலையிலேயும் தெழித்துவிட்டார். பின்னர் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள கல்முனை மாநகர சபை உறுப்பினர் ராஜனிடம் நீரை அருந்துவதற்கு கொடுத்த போது, அவர் நீரை அருந்த மறுத்துவிட்டார். பின்னர் ராஜனுக்கு தலையில் தண்ணீரை தெழித்துவிட்டார்.
பின்பு மிக, மிக குறுகிய காலத்தினுள் இப்பிரதேச டிசயலகம் தரமுயர்த்தப்படும் இல்லையேல் அனைத்து பிக்குகளும் இணைந்து இவ்விடத்தில் போராட்டம் நடாத்துவோம் என கலகொட அத்தே ஞானசாரதேரர் இதன்போது தெரிவித்தார்.
பின்னர் உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும், தாம் இப்போராட்டத்தை கைவிடவில்லை எனவும், தமது போராட்டம் நீராகாரம் மாத்திரம் அருந்தி தமது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் வரைக்கும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எனினும், உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்களின் உடல் நிலை சோர்வடைந்திருப்பதையிட்டு நோய்காவு வண்டி மூலம் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்ட 5 மருத்துவ சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை முடிந்ததும், உடன் மீண்டும் நீராகாரம் மாத்திரம் அருந்து அதே இடத்தில் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலத்து பாதுகாப்புக்க மத்தியில் கல்முனைக்கு வந்த கலகொட அத்தே ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.
0 Comments:
Post a Comment