10 Mar 2019

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டம்

SHARE
திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டம் 2 வருடத்தை கடந்துள்ளதையடுத்து, கவனயீர்ப்பு போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டம் சனிக்கிழமை (09) திருகோணமலை – கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தங்களுக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், கையெழுத்து வேட்டையையும் முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்த கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த போராட்டத்தின் முடிவில் ஆளுநர் செயலகத்திலிருந்து திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோயிலிற்கு ஊர்வலமாக சென்று வழிப்பாட்டில் ஈடுபட்டனர்.
கையெழுத்திடப்பட்ட படிவங்கள் ஜெனீவாவிற்கு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் திருகோணமலை மாவட்ட சங்கத்தலைவி நாகேந்திரன் ஆஷா இதன்போது தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: