கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு ஆற்றாங்கரை கண்ணாமரப்பற்றைக்குள் இருந்து பெருமளவிலான கசிப்பும், அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் இன்று(10) ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்டதாக கொக்கட்டிச்சோலை காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.வஹாப் தெரிவித்தார்.
தாண்டியடி விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இப்பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது, 12இலட்சத்து 60ஆயிரம் மில்லிலீற்றர் கோடாவும், வடிக்கப்பட்ட நிலையில் இருந்த 10ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் உட்பட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், மூவர் தப்பியோடி உள்ளதாகவும், தப்பியோடிவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி கூறினார்.
0 Comments:
Post a Comment