11 Mar 2019

வயலுக்குச் சென்ற விவசாயியைக் காணவில்லை.

SHARE
அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் 6 ஆம் பிரிவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட றாணமடு எனும் பகுதியிலுள்ள அவரது வயலுக்கு ஞாயிற்றுக்கிழமை (10) சென்றுள்ளார். இவ்வாறு வயலுக்குச் சென்றவர் திங்கட்கிழமை (11) யாகியும், வீடு திரும்பவில்லை என உறவினர்கள் அவரது வயல் அமைந்துள்ள இடத்திற்கு திங்கட்கிழமை (11) சென்று தேடியுள்ளனர்.
அங்கு அவர்களால் குறித்த விவசாயியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அந்த வயற் பகுதியில் அமைந்துள்ள காட்டுக்குள், அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளும், அவர் அணிந்திருந்த தலைக்கவசமும் வீழ்ந்து கிடப்பதை உறவினர்கள், அவதானித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளிப் பொலிசாருக்கு அறிவித்துள்ளதாக உறவினர்கள் தெரித்துள்ளதுடன் தொடர்ந்து விவசாயியைத் தேடி வருகின்றனர். இவ்வாறு காணாமல் போனவர் அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு என உறவினர்கள் தெரிவித்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: