நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கு எதிராக கிரான் பிர தேசத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை காலை (11.03.2019) நடைபெற்றது.
கிரான் இளைஞர்களினால் இவ் கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினை சட்ட வரையறைகளை மீறி பாராளுமன்ற உறுப்பினர் தமது அதிகாரத்தினை பயன்படுத்தி 2 கூலித் தொழிலாளர்களை கூண்டில் அடைத்தார்.எவ்வளவு அபிவிருத்தி வேலைகள் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் புறம் தள்ளி விட்டு கூலியாளர்களை கூண்டில் அடைத்ததை வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்தே இவ் கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிரான் சுற்று வளைவு மையத்தில் கூடிய இளைஞர்கள் சிலர் பாதாதைகள் சிலவற்றினை கையில் ஏந்தியவாறும் பாராளுமன்ற உறுப்பினரது உருவம் தாங்கிய பொம்மையினை தூக்கிக் கொண்டு கோசங்களை எழுப்பி ஊர்வலமாக கிரான் சுற்று வளைவு மையத்தினை சுற்றி வந்தனர். ‘தமிழரசு கட்ச்சியே ஏழைகளை சிறையில் வைப்பதா.” “இது உங்களது அரசியல் வங்குரோத்தா”. “எழுவது நாம் வீழ்வது நீர்”.”தமிழர்கள் என்ன மடையர்களா” என்பன போன்ற வாசனங்களை உள்ளடங்கிய பாதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.
கண்டனப் பேரணியின் இறுதியில் பாராளுமன்ற உறுப்பினரது பெயர் குறிக்கப்பட்ட உருவப் பொம்மை வீதியில் வைத்து ஆர்பாட்டாக்காரர்களால் எரியூட்டப்பட்டது.
0 Comments:
Post a Comment