மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட விடுதிக்கல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (10) செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் பொ.தேவராஜன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில், மாணவர்களுக்கான போத்தலில் நீர் நிரப்புதல், தாங்குதிறன் ஓட்டம், தடை தாண்டுதல், பழம்பொறுக்குதல், மிட்டாய் ஓட்டம் போட்டிகளும், பெற்றோர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெற்றன.
போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை முன்புறம் அமைந்துள்ள விளையாட்டு திடலில் நடைபெற்ற நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், மாவட்ட இணைப்பாளர் க.கோபிநாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment