11 Mar 2019

இளம் தாயின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவெம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 19 வயதான இளம் தாயொருவரின் சடலத்தை ஞாயி;ற்றுக்கிழமை 10.03.2019 தாம் மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று வயது நிறைவடைந்த குழந்தைக்குத் தாயான, மாவடிவேம்பு -02, மணிவாசகர் வீதியை அண்டி வசித்து வந்த சிவானந்தம் ஜானு என்ற இளம் தாயின் சடலமே பொலிஸாரால் மீட்கப்பட்டது.

வீட்டில் இளம் தாயொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாரும் தடயவியல் பொலிஸ் குழுவினரும் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இந்த இளம் தாய் மாதாந்த, வாராந்த சீட்டுப் பணம் செலுத்துவற்கும், தவணை அடிப்டையில் பணம் செலுத்துவதாகப் பெற்றுக் கொண்ட உடுதுணிகள், வீட்டுபயோகப் பொருட்கள் என்பனவற்றுக்கான பணத்தைச் செலுத்துவதற்கும் வசதிவாய்ப்பின்றி பணமுடை விரக்தியில் இருந்து வந்ததாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: