12 Mar 2019

நாட்டுக்கு சிறந்த தமைத்துவங்களின் தேவைப்பாடு அதிகமாகவுள்ளது கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர்

SHARE
நாட்டில் சிறந்த தமைத்துவங்களின் தேவைப்பாடு அதிகமாகவுள்ளது கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர்
சிறந்த தமைத்துவங்களின் தேவைப்பாடு அதிகமாகவுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள்  சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய தலைவருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் பதியுத்தீன் மஹ்மூது வித்தியாலய மாணவ தலைவர்களக்கு சின்னஞ் சூட்டு விழாவில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பாடசாலை அதிபர் எம்.எம். ஜலால்தீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை 12.03.2019  இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுபைர் மேலும் உரையாற்றுகையில் சிறந்த தலைமைத்துவங்கள் இல்லாமை காரணமாக இந்த நாடு அதிக இழப்புக்களைச் சந்தித்துள்ளது.

பிரதேச அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்படும் அரசாங்க நிதி ஒதுக்கீடுகளை தமது சொந்த நிதி போல காட்டி ஏழை மக்களை ஏமாற்றி வாக்குப் பிச்சை கேட்கும் அரசியல்வாதிகளால்தான் தொடர்ந்தும் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.

கம்பெரலிய அபிவிருத்திக்கான பணத்தை வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறார்கள். கம்பெரலிய மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திக்கான பணம் மக்களின் வரிப் பணம் மூலம் கிடைத்த அரசாங்கப்பணம்.

இதற்கும் அரசியல்வாதிகளின் ஏமாற்றுக்கும் சம்பந்தமில்லை. கம்பெரலியவுக்கான பணம் எந்தவொரு அரசியல்வாதியின் சொந்தப்பணமும் இல்லை. அது மக்களின் பணம்.

மக்களைப் பற்றி எதுவித அக்கறையுமில்லாது தொடர்ந்தும் ஏமாற்றுபவர்களாக அரிசியலவ்hதிகள் இருக்க, மக்களும் ஏமாறுபவர்களாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

திட்டமிட்ட அபிவிருத்தி, தூரநோக்கு, மக்களின் வாழ்வாதாரம், காணிப்பிரச்சினைகள் என்று எதிலுமே அக்கறையில்லாவதர்களாக ஏமாற்றிக் கொண்டிருக்ககும் அரசியல்வாதிகளையே மக்களும் ஆராதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனை தொடர்ந்தும் அனுமதித்தால் அழிவே மிஞ்சும். இதுபற்றி எதிர்கால இளஞ் சமூகம் சிந்திக்க வேண்டும்.

பிரதேசத்தில் ஆளுமையுள்ள அரசியல் தலைமைதர்துவங்களின் தேவைப்பாடு அதிகமாகவுள்ளது.

அரசியலாயினும் நிருவாக மட்டமாயினும் சிறந்த ஆளுமை கொண்ட தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எனது அபிப்பிராயமாகும்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: