12 Dec 2018

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விசேட போக்குரத்து.

SHARE
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடசாலைக்கு சென்று வருவதற்கான விசேட இலவச போக்குவரத்து சேவையினை புதிய வருடத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு பிரதேச மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்பில் புதன்கிழமை (12) குறிப்பிடுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

பிரதேச சபையின் தவிசாளர் மேலும் கூறுகையில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வகுப்பிலே கற்றுவருகின்றனர். 

இவர்கள் பிரதேசத்தின் சகல கிராமங்களிலிருந்தும் வருகைதந்து கல்வி கற்கின்றனர். இவர்களுக்கான போக்குவரத்தினைப் பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதென்பதும் மிகவும் சிரமமானது. இந்நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேச வேட்ள்விஸன் நிறுவனம் இம்மாணவர்களுக்கான போக்குவரத்து வசதியினை கடந்த காலங்களில் இலவசமாக வழங்கியிருந்தது. ஆனாபோதிலும் தொடர்ச்சியாக அவர்களினால் வழங்கமுடியாத நிலையில், மண்முனை தென்மேற்கு பிரதேசசபையினால் இலவசபோக்குவரத்தினை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதற்கமைய எதிர்வரும் புதிய வருடம் ஜனவரி 2ம் திகதியிலிருந்து மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் ஊடாக இம்மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான இலவச போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: