14 Oct 2018

காட்டு யானைகள் தாக்கியதில் வயோதிபத் தாயும் மகனும் படுகாயம்

SHARE
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆனைகட்டியவெளி கிராமத்திற்குள் சனிக்கிழமை இரவு 13.10.2018 ஊடுருவிய காட்டு யானைகளால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சின்னத்தம்;பி மாரிமுத்து (வயது 85) தாய், சின்னத்தம்பி நடராசா (வயது 58) மகன் ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென காட்டுப் 
பகுதிக்குள்ளிருந்து உள்நுழைந்த காட்டு யானைகள் வீட்டிருந்தோரைத் தாக்கியதில் வயோதிபத் தாய்க்கு கை கால்கள் முறிந்துள்ளதாகவும் மகனுக்கு தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: