5 Oct 2018

வெல்லாவெளியில் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல் நட்டு வைப்பு.

SHARE
(எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளியில் வியாழக்கிழமை (04) விற்பனை நிலையம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இதற்காக கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 6.5 மில்லியனும் மீள் குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 2 மில்லியனும்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆரம்பகட்டமாக மீள்;குடியேற்ற  அமைச்சினால் வழங்கப்பட்ட 2 மில்லியன் நிதியினைக் கொண்டு விற்பனை நிலையத்திற்கான ஆரம்ப வேலைகள்  இடம்பெறறவுள்ளன.

இப்பிரதேசத்தில் பெரும்பாலான மட்பாண்ட உற்பத்திகள் பனைஓலை உற்பத்திகள், போன்ற பல்வேறுபட்ட உற்பத்திகள் இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் மக்களின் நலனுக்காக இவ்விற்பனை நிலையம் அவசியத்தை உணர்ந்த நல்லெண்ணம் கொண்ட பிரதேச செயலாளர் அவர்களின் எண்ணக்கருவில் உருவானதும் இப்பிரதேச மக்களின் தேவையாகவுள்ள இவ்விற்பனை நிலையத்தினை பலபிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில்; கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய  பட்டிருப்புத்தொகுதி ஐ.தே.க அமைப்பாளரும்;, ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான சோ.கணேசமூர்த்தி…  பிரதம மந்திரி அவர்களின் விசேட நிதியிலிருந்து 20 மில்லியன் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் , இதில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு 10 மில்லியனும் ஏனைய 10 மில்லியனையும் களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை பிரதேசசெயலகத்திற்கு அபிவிருத்தி வேலைகளுக்காக வழங்கப்பட்டதாகவும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிகழ்வின் போது பிரதம அதிதி பட்டிருப்புத் தொகுதி ஐ.தே.க அமைப்பாளரும்;, ஒருங்கிணைப்புக்குரு இணைத்தலைவரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சின் ஆலோசகருமான சோ.கணேசமூர்த்ததி, உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் உதவித் திட்டமிடப்பணிப்பாளர் எஸ்.சசிகுமார் பிரதேச சபை உறுப்பினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 













SHARE

Author: verified_user

0 Comments: