Vibrant
Voices என்ற தொனிப்பொருளில் பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களது கருத்துக்களையும் அரச ஆட்சியில் உள்வாங்கும் பொருட்டு 4 நாள் வீடியோ மற்றும் டிஜிட்டல் ஊடகம் தொடர்பான பயிற்சி நெறியானது கடந்த 20ம் திகதி தொடக்கம் 23ம் திகதி செப்டம்பர் மாதம் வரை நீர்கொழும்பில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
இந்தப்பயிற்சிநெறியின் நோக்கமானது பெண்களுக்காக பணியாற்றும் கிராமிய மட்ட நிறுவனங்களுக்கு தங்களது குரல்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தனியான தளத்தை உருவாக்கிக் கொடுப்பதும்,அடிக்கடி ஓரங்கட்டப்படுகின்ற வலிவுற்ற பெண்களின் பிரச்சினைகளை சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் கதையாக்கம் மூலம் ஏனையவருக்கு தெரியப்படுத்துவதும்,தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவும், அரச பிரதிநிதிகளுடன் அத்தாட்சிகளின் அடிப்படையிலான பிரச்சாரங்களை மேற்கொள்ள உதவி செய்வதும் ஆகும்.
இந்தப் பயிற்சி நெறிக்கு முதல் கட்டமாக அபே சக்தி –பொலன்னறுவை, கிழக்கு அபிவிருத்தி சமூக நிறுவனம் - மட்டக்களப்பு, பெண்கள் அபிவிருத்தி நிலையம் -பதுளை, ஸ்டான்ட் - மற்றும் டிரான்ஸ் ஜென்டர் வலையமைப்பு –கொழும்பு மாவட்டங்களில் பணியாற்றும் நிறுவனங்களின் 15 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு புதிய ஊடகம்,சமூக ஊடகம்,இலவச மென்பொருள்கள்,வீடியோ கருவிகளை கையாளுதல்,நேர்காணல் ஒன்றை சிறப்பாக பதிவு செய்தல், வீடியோக்களை மாற்றம் செய்தல் போன்ற விடயங்களை இந்த நான்கு நாள் பயிற்சிநெறியில் பயிற்சியளிக்கப்பட்டது.
இந்தப்பயிற்சிநெறியின் முடிவின் போது பங்குபற்றுனர்கள், பெண்களின் தேவை மற்றும் பிரச்சினைகள் தொடர்பான 30 வீடியோ கதையாக்கங்களை உருவாக்கவுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கான களரீதியான உதவிகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் நிறுவனம் வழங்கவுள்ளது.
இந்த புதிய செயல்திட்டமானது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் (USAID) நிதியுதவியுடனும்,IREXநிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் SDJF நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்குWWW.Ldjf.orgமற்றும் 011 280 6265 ஐ அணுகவும்.

0 Comments:
Post a Comment