புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக நாடாளுடமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதனால் ஏற்படும் தீமைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்ட விடையங்கள், மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குத் கொண்டுவந்தும் அதுதொடர்பில் இதுவரையில் எவரும் கருத்தில் எடுக்கப்படவில்லை. மக்களின் எதிர்ப்புக்களைத் தாண்டி தனி ஒருமனிதன் இந்த தொழிற்சாலையை முன்னெடுக்கின்றார் என்றால் அதன் பின்னணியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதியும் உள்ளார்கள் என மக்கள் சந்தேகிக்கின்றார்கள். தற்போது அது உண்மைபோன்றுதான் உள்ளது. ஏனெனில் அண்மையில் இந்த தொழிற்சாலையை நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் நிருவாக நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்ட கர்த்தால் இடம்பெற்றிருந்தது. அதனையும் தாண்டி ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதி ஒருமாதமாகியும் இன்னும் பதில் வரவில்லை.
அந்த தொழிற்சாலையில் தற்போது அவசர அவரசமாக கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் எமக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கையீனம் ஏற்பட்டிருக்கின்றது. மேலும் இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராகவும், மக்களுடைய உணர்வுகளை மத்திக்காத ஜனாதிபதிக்கு எதிராகவும், எதிர்வரும் 4 ஆம் திகதி மாவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்ற வேளையிலே எனக்கு திங்கட்கிழமை (01) விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவும், பிரதி விவசாய அமைச்சர் அங்கஜன் இராமநாதனும் என்னுடன் தொடர்பு கொண்டு 5 ஆம் திகதிவரை எமக்கு கால அவகாசம் கேட்டிருக்கின்றார்கள் ஜனாதிபதியுடன் பேசி எமக்கு நல்லதொரு முடிவைப் பெற்றுத்தருமாறு அந்த இரு அமைச்சர்களும் கூறியிருக்கின்றார்கள். அதுவரைக்கும் எமது போராட்டங்கைள 5 ஆம் திகதி வரை இடைநிறுத்தியிருக்கின்றோம். அதன் பின்னர் சாதகமான முடிவு கிடைக்கப் பெறாநிலையில் எமது போராட்டம் உக்கிரமடையும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment