மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகள் கல்லூரியின் முதல்வர் இராஜதுரை பாஸ்கர் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் திங்கட்கிழமை(01.10.2018) நடைபெற்றது.
இச்சிறுவர்தின நிகழ்வில் மட்டக்களப்பு தேசிய கல்வியல் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.சச்சிதானந்தம், பிரதியதிபர்களான எஸ்.சதீஸ்வரன், இ.இலங்கேஸ்வரன், பாடசாலைகள் அபிவிருத்திசங்க செயலாளரும், ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதி பொதுமுகாமையாளருமான எந்திரி வை.கோபிநாத், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிறுவர்களின் கடமைகள், உரிமைகள், அவர்களின் செயற்பாடுகள், சிறுவர்களின் பாதுகாப்புகள், ஒழுக்க விழுமியங்கள், அரசாங்கத்தின் சிறுவர் பாதுகாப்பு விடயங்கள், எதிர்காலத்தில் அதன் திட்டங்கள் பேசப்பட்டன.
சர்வதேச சிறுவர்தினம் சம்பந்தமாக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.சச்சிதானந்தம், கல்லூரியின் முதல்வர் இராஜதுரை பாஸ்கர், ஆசிரியைகளான திருமதி. கே.சிவநேசன், எஸ்.அருள்மொழி, மற்றும் மாணவர்கள் இதன்போது உரையாற்றினார்கள்.
மட்டக்களப்பு இலங்கை வங்கிக்கிளையினால் சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், கற்றல் உபகரணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு இன்றையநாளில் இனிப்புபண்டங்கள், சிறப்பு பரிசுகள் ஆசிரியர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.












0 Comments:
Post a Comment