4 Nov 2025

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 240 கதிரைகள் சீன தூதரகத்தினால் மாவட்ட சிவில் சமூக அமைப்பினூடாக வழங்கி வைப்பு.

SHARE

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  240 கதிரைகள் சீன தூதரகத்தினால் மாவட்ட சிவில் சமூக அமைப்பினூடாக வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கோரிக்கையின் பேரில் சீனத் தூதரகத்திடமிருந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 240 கதிரைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தினரிடம் இன்று திங்கட்கிழமை(03.11.2025) மாலை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் சி.மாமாங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி திருமதி க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், வைத்தயிசாலை நிருவாகத்தினர் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட சிவில் சமூக அமைப்பு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தமது கோரிக்கைக்கு இணங்க சீனத் தூதரகத்தின் ஊடாக இக்கதிரைகளைப் பெற்றுத்தந்த சிவில் அமைப்பிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இப்போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் நலன் கருதி, இன்னும் பல தேவைகள் உள்ளன அவ்வாறான தேவைகளில் முன்னுரிமை அடிப்படையில் முடியுமானவற்றை நிவர்த்தி செய்து தருவதற்கு மாவட்ட சிவில் அமைப்பு முன்னிற்க வேண்டும் எனவும் இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி திருமதி க.கலாரஞ்சினி தெரிவித்தார்.




























SHARE

Author: verified_user

0 Comments: