1 Oct 2018

இனப்பிரச்சினைத் தீர்வு என்பது இப்பொழுது தீர்த்துக் கட்டும் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றது முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்

SHARE
இனப்பிரச்சினைத் தீர்வு என்ற விடயம் போய் இப்பொழுது தீர்த்துக் கட்டுதல் எனும் நகர்வு நடந்து கொண்டிருக்கின்றது என முன்னாள் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு 30.09.2018 இடம்பெற்ற “நாளைய தலைமுறை” எனும் விவரத் திரட்டு நூல் வெளியீடு, துறைசார்ந்த ஆர்வலர்கள் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
ஸ்ரீலங்கா “ஷெட்” நிறுவனத்தின் Sri Lanka SHED Foundation (Serving Humanity Through Empowerment and Development)    தலைவர் கே. அப்துல் வாஜித் தலைமையில் இடம்பெற்ற அந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றியபஷீர் சேகுதாவூத்,

இன்றும் நாடு மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி எதுவுமில்லை. திருப்தியடையக் கூடியளவு ஏற்றுமதிகள் இல்லை. இலங்கை நாணய மதிப்பு சரிந்து விட்டது.

இதனடிப்படையில் பார்த்தால் இனப்பிரச்சினை தீர்வும் கிடைக்கமாட்டாது.
இனப்பிரச்சினைத் தீர்வு என்பதை இப்பொழுது எதிராக இருப்பவர்களை தீர்த்துக் கட்டுவதாக நினைத்திருக்கிறார்கள்.

இலங்கை இராணுவத்தினருக்கு சர்வதேச நாடுகள் பொதுமன்னிப்பு வளங்க வேண்டும் என்று ஐ நாவிலே கோரிக்கை முன்வைக்கும், தனது கையில் பொதுமன்னிப்பை வைத்துள்ள ஜனாதிபதி தனது பிடியிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது என்பதுதான் இங்கு எழுகின்ற இருநிலை முரண்பாடுகளாகும்.

எதுவித விசாரணைகளுமின்றி அல்லது விசாரணைகளுடன் இலங்கைச் சிறைகளில் தமது வாழ்நாளை கழிக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பை வழங்கி விட்டு உலக நாடுகளிடம் போய் இராணுவத்திற்குப் பொதுமன்னிப்பு வழங்குங்கள் என்று கேட்பதில் நியாயமிருக்கிறது.
சிங்கள செல்வாக்கை வளர்க்க வேண்டும் என்கின்ற அரசியல் போக்கிலேயே சிங்களத் தலைவர்கள் ஓடுகிறார்கள் இதில் மைத்திரியும் ஒன்றுதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் ஒன்றுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவும் ஒன்றுதான்.

அதேவேளை தமிழர்களுக்குள் வீறாப்புப் பேசிப் பேசி காலம் கடத்தி அரசியல் செய்கி;ற ஒரு நிலையும் அடுத்த பக்கத்தில் இருக்கின்றது.
முஸ்லிம்களின் நிலைமை வேறு. அவர்கள் நடாத்தப்படும் விதம் மிகவும் அநீதியானது.

வேறு வழியின்றி சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் விடிவே இல்லாத சமூகங்களாக அடிமைகளாக வலம் வருவார்கள் என்பது பெரும்பான்மையினரின் எதிர்பார்ப்பு. உண்மையும் அதுதான்.
வடகிழக்கு மலையக தமிழ் முஸ்லிம் மக்கள் 100 வீதம் இணைந்து முடிவெடுப்பார்களாக இருந்தால் இந்த நாட்டினுடைய தலைவிதியை மாற்றமுடியும்.
சமத்துவமான உரிமைகளோடு சிறுபான்மையினங்களும் வாழ முடியும்.
இல்லையேல் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மலையகத்தவர்களுக்கும் இனி  எதிர்காலம் என்பது கிடையவே கிடையாது.
சமூக சேவை செய்ய ஆர்வம் கொள்பவர்கள் முதலில் சமூகத்திற்குள் என்னென்ன பிரச்சினைகள் புரையோடிப்போய் இருக்கின்றன என்பதை ஊடுருவிப் பார்க்க வேண்டும்.

அப்போதுதான் காலத்திற்குப் பொருத்தமான, சூழ்நிலைக்கு ஏற்ற சேவையாற்றியவர்களாக நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
இப்பொழுது குபு குபு என உலக அரங்கிலிருந்து நல்லதும்  கெட்டதுமான விசயங்கள் சமூகத்திற்குள் பிரவாகம் எடுத்துப் பாய்கின்றன. அதிலொன்றுதான் இந்த போதைப் பொருள் விடயம்.

போதைப் பொருளின் தீமைகளைப்பற்றி நாம் தனிப்பட்ட முறையில் மாத்திரமல்ல நிறுவனங்களின் கூட்டாக இயங்குகின்ற பள்ளிவாசல் சம்மேளனம் கூட வாய் திறந்து பேசுவதில்லை. மார்க்க உலமாக்களும் பேச மாட்டார்கள்.
ஏனெனில் போதைப் பொருள் வர்த்தகம் என்பது உலக அரங்கிலே வியாபித்து வேர்பிடித்து இருக்கின்ற அசைக்க முடியாத ஆபத்தான ஆலமரம். அது உயிருக்கே அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒன்று. அதனால் அதுபற்றிப் பேசவோ செயற்படவோ யாரும் அதனருகே நெருங்குவதில்லை.

பிரச்சினையை இன்னதுதான் என்று புரிந்து கொள்வதே முக்கியமானது.
ஒரு துளி போதைப் பொருளாவது இளைஞர்கபை; போய்ச் சேராது தடுக்க வேண்டும்.

மேற்குலகம் நமது வளங்களைப் பாவித்து விட்டு நவீன காலனித்துவத்தைக் கொண்டு வந்தார்கள்.

இன்னும் மேற்குலகும் இந்தியாவும் சீனாவும்தான் நமது இலங்கை அரசியலை நடாத்துகிறார்கள்.








SHARE

Author: verified_user

0 Comments: