1 Oct 2018

கிழக்கு மாகாணத்தில் சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் விசேட மருத்துவ முகாமும் கண்காட்சியும்

SHARE
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும், கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து மாபெரும் சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாட்டையும் கண்காட்சியையும் விசேட மருத்துவ முகாமையும் நடாத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 4,5,6 (வியாழன், வெள்ளி சனி) ஆகிய மூன்று தினங்களும் காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை திருகோணமலையிலுள்ள இந்து கலாச்சார மண்டபத்தில் ஆய்வு மாநாடும் கண்காட்சியும் மருத்துவ முகாமும் இடம்பெறவுள்ளன.

இந்நாட்களில் கொரியன் அக்யூபங்சர், உடல் உள வள மேம்பாட்டு பஞ்சகர்ம சிகிச்சை,  பாரம்பரிய மருத்துவ நிபுணர்களால் பெண்களுக்கான விசேட சிகிச்சைகள்,  இரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகளைக் குணப்படும் முறை(ஊரிpiபெ (ர்தையஅய) வுhநசயில) போன்ற சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் இங்கு இடம்பெறும் விசேட மருத்துவ முகாமில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் தேவையானோர் 0262225993, 0262225639 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: