தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையினால் (நைற்றா) புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சி நெறிகளுக்கான விளக்கங்களை தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கும், அவர்களது பெற்றோருக்குமான விழக்கமளிக்கும் நிகழ்வு இன்று திங்கட் கிழமை (01) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் பயிற்சி உத்தியோகஸ்த்தர் வி.விஜயதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, பயிலுனர் பரிசோதகர் கோ.பிரியதர்சினி, மற்றும், தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் 25000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும், ஆலோசனைக்கமைய இத்திட்டம் இன்று திங்கட்கிழமை (01.10.2018) நாடு பூராகவும் அந்த அதந்த மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையம், மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி, மற்றும் வாழைச்சேனை ஆகிய 3 இடங்களில் இப்பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் கட்டுமானம், சுகாதாரம், சுற்றுலாத்துறை, வாகனத்தொழில்நுட்பம், அகிய துறைகளில் உள்ளடங்கும் பல பயிற்சி நெறிகள் என்.வி.கியூ - 3 யிலிருந்து பட்டப்படிப்புவரை மேற்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 392 விண்ணப்பங்கள் இப்பயிற்சிக்காக கிடைக்கப்பபெற்றுள்ளன. ஒரு வருட காலத்தினுள் ; என்.வி.கியூ - 3 தரமுடைய பயிற்சியைப் பெற்று வெளியேறும் அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் தகுந்த சம்பளத்துடன் தொழில்வாய்ப்புக் காத்திருக்கின்றன. எனவே தற்போது கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்குரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க உறுதுணை பூணவேண்டும் என இதன்போது தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) பயிற்சி உத்தியோகஸ்த்தர் வி.விஜயதாஸால் விளக்கமளிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment