இந்நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர் நசுக்கப்பட்டு வரும் சமூகங்களாக உள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே சிந்தனைப் போக்கில் ஒற்றுமைப்படுவதே முதிர்ந்த அரசியலாகவும் உரிமைகளுக்கான திறவு கோலாகவும் அமையும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவராக இருந்த மறைந்த மர்ஹ{ம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவு தினத்தையிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
அஷ்ரபின் நினைவு தினமான ஞாயிற்றுக்கிழமை 16.09.2018 வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தொடர்ந்து நசுக்கப்பட்டு வரும் சிறுபான்மை மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்பதில் மறைந்த தலைவர் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்திருந்தார்.
அதிலொன்றுதான் பல்லின மக்கள் வாழும் இலங்கையில் வேற்றுமையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதும் அதற்கான பொறி உருவாக்கப்பட வேண்டும் என்பதுமாகும்.
சிறுபான்மைகளின் பலத்தை பெரும்பான்மை ஆட்சியாளர்கள் மதி;க்க வேண்டும் அதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமை காணப்பட வேண்டும் என்பதை அவர் செயலிலும் நிரூபித்துக் காட்டினார்.
சிறுபான்மையினர் தங்களுக்குள் உள்ள உரிமைகளின் அடிப்படையில் பரஸ்பரம் மதிக்கப்படவேண்டுமென்ற என்ற மந்திரத்தை மறைந்த மாமனிதர் கொண்டிருந்த அஷ்ரப் அவர்கள் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களை மதித்து அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் வளர்த்து அதனை பாதுகாத்தும் வந்தார்;.
எடுத்துக்காட்டாக தமிழ் சமூகத்திறகெதிரான 1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தின் பின்பு இந்தியா சென்ற தமிழ் தலைவர்களை அழைத்து அஷ்ரப் அவர்கள் தனது கல்முனை அம்மன் கோயில் வீதியி;ல் அமைந்திருந்த ‘ஹிறா’இல்லத்தில் ஒரு விசேட கலந்துரையாடலை நடாத்தியிருந்தார்.
அந்த சந்திப்பில் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களான மறைந்த அ. அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், மலையக மக்களின் தலைவராக இருந்த தொண்டமான், பட்டிருப்பு முன்னாள் எம்.பி. கணேசலிங்கம், அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர் கல்முனை வேல்முருகு, கந்தையா நொத்தாரிஸ் போன்ற உள்ளுர் தமிழ் பெரும் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட ஏனையோரும் கலந்து கொண்ட இன ஐக்கியத்திற்காக அஷ்ரப் அவர்கள் எடுத்து வரும் முயற்சியைப் பாராட்டியதோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் வாழ்த்தி வரவேற்று, ஆசீர்வாதித்தார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவை வலுப்படுத்த உதவ வேண்டும் என்றும் வேண்டிச் சென்றார்கள்.
அந்த இலக்கை நோக்கி அஷ்ரப் அவர்கள் முன்னேறும் போது அவரும் சதி வலை பின்னப்பட்டு கொல்லப்பட்டு விட்டார்.
இன நல்லுறவுச் சிந்தனையைத் தந்த மூத்த தமிழ் முஸ்லிம் தலைவர்கள் எவரும் தற்போது நம் மத்தியில் இல்லை என்பதுதான் இன்றைய பிரச்சினை.
அதனால் அவர்களது சிந்தனையை புதிதாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.
எனவே, மறைந்த தலைவர் விட்ட இடத்திலிருந்து நாம் நமது சிந்தனைப் போக்குகளுக்கச் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
சமகால அரசியலில் உண்மை எது பொய்மை எது என்ற கறுப்பும் வெள்ளையும் மங்கலானதுமான கால கட்டத்தில் நாம் எதிர் வினையாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
உண்மையில் சிறுபான்மை இனங்கள் கடந்த கால பிளவுபட்ட அரசியல் போக்கிலிருந்து விரைந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.
இன்னமும் பேரினவாத பிரித்தாளும் அரசியலின் சூத்திரங்களை புரிந்து கொள்ளாதவர்களாக புத்தி பேதலித்துப் போய் தொடர்ந்தும் பிளவுபட்டு நிற்போமயரின் இந்த நாட்டில் போக்கிடமின்றி அலைய நேரிடும்.
இந்த உண்மைகளை பகுத்தறிவாளர்கள் பட்டவர்த்தனமாகச் ஓங்கி உரத்துச் சொல்ல வேண்டும்.
இல்லையேல், சிறுபான்மையினரின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளுக்குப் பதிலாக “பிச்சை வேண்டாம், கடிக்க வரும் நாயைப் பிடித்தால் போதும், நான் தப்பிக் கொள்கின்றேன்” என்று சிறுபான்மையினர் பேரினவாதத்திடம் கூறும் நிலை உருவாகும்.
எனவே, இரு சமூகங்களிலமுள்ள புத்திஜீவிகள் இதனைப் புரிந்து கொண்டு அவசியமும் அவசரமுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பிளவுபட்டு நன்றதால் இழந்த ஏராளமானவற்றை காலங்க கடந்தாவது மீட்பதற்கு உயிரோட்டமான சிந்தனைகளை முன்வைக்க வேண்டும்.
இல்லையேல், பேரினவாத பிரித்தாளும் சிந்தனைகள் தனது பேய் முகத்தைக் காட்டும் காலம் வெகு தூரத்தில் இருக்காது.”

0 Comments:
Post a Comment