29 Sept 2018

ஊடகங்களும் சமூக நலநோக்குள்ள அரசியல்வாதிகளும் இணைந்தால் நாட்டைச் சபீட்சம் மிக்கதாக மாற்றலாம். மலையக சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்

SHARE
ஊடகங்களும் சமூக நலநோக்குள்ள அரசியல்வாதிகளும் இணைந்தால் நாட்டைச் சபீட்சம் மிக்கதாக மாற்றலாம்.
மலையக சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்
ஊடகங்களும் சமூகநல நோக்கு சிந்தனையுள்ள அரசியல்வாதிகளும் மனம் ஒன்றித்து  இணைந்தால் பல்வேறு வகையிலும் சின்னாபின்னப்பட்டுக் கிடக்கின்ற இந்த நாட்டை சுபீட்சம் மிக்கதாகக் கட்டியெழுப்பலாம் என மலைநாட்டு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையோடு இலங்கை இதழியல் கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலைமாறுகால ஊடக பொறுப்புக்கள் என்ற தொனிப்பொருளில் அமைந்த இரு நாள் பயிற்சிச் செயலமர்வு கொழும்பு ஹில்ரன் உல்லாச விடுதியில் புதன், வியாழன் (26,27) ஆகிய இரு தினங்களும் இடம்பெற்றது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  பணிப்பாளரும் சமூக ஆய்வு எழுத்தாளருமான பெரியசாமி முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை இதழியல் கல்லூரியின் தலைமைப் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த  சர்வதேச ஆய்வு ஊடகவியலாளரும் வளவியலாளருமான கரென் கிறிஸ்ரினா வில்லியம்ஸ்  (முயசநn ஊhசளைவiயெ றுடைடயைஅள)  உட்பட உள்நாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் திகாம்பரம்,

இலங்கையைப் போன்றதொரு அழகிய நாட்டை வேறெங்குமே காண முடியாது. நான் ஊடகங்களுடன் மிக நளினமாக நடந்து கொள்வதால் தமிழ் சிங்கள ஆங்கில மொழி ஊடகங்களும் எனது சமூக நலப் பணிகளுக்கு முடிந்த ஒத்துழைப்பை வழங்குகின்றன.
இந்த நாட்டில்நடந்து முடிந்த அழிவுகளுக்கு மூவினத்தவரும் பொறுப்புக் கூற வேண்டும். மூவினத்தவர்ளும் இந்த யுத்த அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நாம்  நமது எதிர்கால சந்ததிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

ஊடகவியலாளர்கள்தான் நல்லதையும் கெட்டதையும் வெளியே கொண்டு செல்பவர்கள்.

அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகளையும் நீங்கள் வெளியே கொண்டுவருவதால் மக்கள் விழிப்படைகிறார்கள்.

மலையக மக்ளின் வாழ்க்கை முறைபற்றி நீங்கள் அறிவீர்கள். உறங்க இடமின்றி அனைவரும் ஒரே மனைக்குள் ஓய்வெடுக்க வேண்டியுள்ள துர்ப்பாக்கியம் நிறைந்த சூழலை நாம் அனைவரும் இணைந்து மாற்றியமைக்க வேண்டும்.

இது மிகவும் வருத்தமளிக்கின்ற விடயம் என்தால் அந்த விடயத்தில் நான் அக்கறை கொண்டு மலையக தோட்டத் தொழிலாள மக்களை அந்த நரக வாழ்க்கையிலிருந்து மீட்பதற்காக நானே கேட்டு மலையக சமூக அபிவிருத்தி அமைச்சைப் பெற்றுக் கொண்டேன்.

அதன்பலாபலனாக தற்போது ஏழாயிரம் வீடுகளை மலையக மக்களுக்கு அமைத்துக் கொடுக்கும் ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும், எமதுவேண்டுகோளின் பேரில் இந்திய அரசாங்கம் 15 ஆயிரம் வீடுகளை மயைக மக்களுக்கு அமைத்துத் தர முன்வந்துள்ளது.

மலையக மக்கள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் எனும் எனது இலக்கை எனது ஆயுட் காலத்தில் நிறைவு செய்ய முடியாமற் போனாலும் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து மக்கள் வருகின்ற அரசியல்வாதிகளிடம் வலியுறுத்த வேண்டும் என்பதற்கு ஒரு அiடாளமாகவே இந்த வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தேன்.
நான் அடிமட்டத்திலிருந்து லயன் வாழ்க்கை முறையில் வாழ்ந்தவன் என்பதால் மலையக மக்களின் துன்ப துயரங்களை நன்கு அறிவேன்.

அதனால் தற்பொழுது நமக்குள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்தி முடிந்தளவு நன்மைகளை அடைந்து கொள்ளச் நோக்கோடு செயற்பட்டு வருகின்றேன்.

மக்கள் தமது தேவைகளையும் பிரச்சினைகளையும் கூற எனது அமைச்சை நோக்கி வரும்பொழுது நான் அவர்கள் எவரையும் சந்திக்காமல் திருப்பி அனுப்புவதில்லை.

நாளாந்தம் ஆகக் குறைந்தது சுமார் 400 பேராவது என்னைச் சந்திக்க வருகிறார்கள் முடிந்தளவு அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறேன்.




SHARE

Author: verified_user

0 Comments: