மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களுக்கு வங்கிக் கணக்குகள், புத்தகப் பைகள், உபகரங்கள், நூல்கள் விநியோகம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு படித்தரங்களை முதன்மைப்படுத்தித் தெரிவு செய்யப்பட்ட 42 சிறுவர்களுக்கு வங்கிக் கணக்குகள், புத்தகப் பைகள், உபகரணங்கள், நூல்கள் என்பன இலவசமாக வழங்கப்படவிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர்கள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இந்த உதவு ஊக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்தாக அவர் கூறினார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த அவர், ஒக்ரோபெர் 01 ஆம் இடம்பெறும் சர்வதேச சிறுவர்கள் தினத்தில் சிறுவர்களுக்கான உதவு ஊக்க நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
வறுமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலா ஒரு சிறுவருக்கு 3000 ரூபாய் பெறுமதியான உதவிகளாக இவை அமைந்துள்ளன.
மேலும் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களது பெயரில் தேசிய சேமிப்பு வங்கியில் 500 ரூபாய் வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.” என்றார்.
இதேவேளை, சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் திங்களன்று 01.10.2018 ஏறாவூர் நகரில் ஏறாவூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமும், கலை நிகழ்வுகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக
சிறுவர் துஷ்பிரயோகம், வேலைவாங்குதல், பணிக்கமர்த்துதல் உட்பட்ட பல்வேறு வகையான சிறுவர் உரிமை மீறல்களைத் தடுக்கும் முகமாக இந்த விழிப்புணர்வு, கலை கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment