கிழக்கு பல்கலைக் கழகத்தின் 23ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் சனிக்கிழமை 15.09.2018 காலையிலிருந்து இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது.
கலைகலாசார பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம், வணிக முகாமைத்துவ பீடம், விவசாய பீடம், திருமலை வளாக தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், சுவாமி விபுலாநந்தா அழகிய கற்கைகள் நிறுவகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்ட உள்வாரி மாணவர்களும் வெளிவாரி மாணவர்களும் பட்டங்களைப் பெறுகின்றனர்.
0 Comments:
Post a Comment